Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 பெப்ரவரி 03 , மு.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
கவிதா சுப்ரமணியம்
“நாட்டிலுள்ள தமிழ் மற்றும் சிங்கள சமுதாயத்துக்கு இடையில், இனவாதத்தையும் விரோதத்தையும் தூண்டிவிடும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு, இனவாதம் எனும் பேய் பிடித்துள்ளது” என்று, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில், நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது, தொடர்ந்துரைத்த அவர், “நாட்டுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள, சி.வி.யின் இனவாத மற்றும் மதவாதக் கருத்துக்களுக்காக, வடக்கிலுள்ள தமிழ் மக்கள், அவருக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும். அவ்வாறு செய்தால் மாத்திரமே, அவர்களால் முன்னேற முடியும்” என்றார்.
“முதலமைச்சரால் வெளியிடப்பட்டு வரும் இனவாதக் கருத்துகள் காரணமாக, சட்டத்தை உருவாக்குபவர்களுக்கு, வடக்கிலுள்ள அதிகாரப்பகிர்வு குறித்து பேச முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. அவரால் வெளியிடப்படும் கருத்துகள் அனைத்தும், தேசத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துபவையாகவே காணப்படுகின்றன. அவருடைய கருத்துக்களால், நாடு எந்தளவுக்கு பாதிக்கப்படும் என்பதை அவர் விளங்கிக்கொள்ளவில்லை.
தேசத்தின் நல்லிணக்கத்தை தகர்த்தெரிவதற்காக, தமிழீழ விடுதலைப் புலிகளுடனும் அவர்களின் ஆதரவாளர்களுடனும், அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் இணைந்துக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே, விக்னேஸ்வரன் உள்ளார். எனவே, அதிகாரப்பகிர்வு என்ற விடயத்தை மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு, அமைச்சர்களாகிய நாங்கள், இரண்டு தடவைக்கும் மேல் யோசிக்க வேண்டியுள்ளது” என்றும், அமைச்சர் மேலும் கூறினார்.
12 minute ago
18 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
18 minute ago
24 minute ago