2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘பொருளாதார இடைவெளி 2020 இல் நீக்கப்படும்’

Thipaan   / 2016 நவம்பர் 11 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

கடந்த காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்வு செய்யும் நோக்குடன் பிரத்தியேக அடிப்படையில் தொடர்ந்து செயற்பட்டு வந்திருக்கின்றோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இடையே நிலவுகின்ற சமூக பொருளாதார இடைவெளியை 2020 ஆண்டளவில் நீக்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, 2017ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்ட முன்மொழிவுகளை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

பூரண சமாதானம், சுதந்திரம் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு என்பவற்றிற்காக சனநாயகம், அடிப்படை உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி போன்றவற்றினை உறுதிப்படுத்துவதற்குரிய எமது அரிய முயற்சியில் தொடர்ந்தும் முன்னேறிச் செல்வோம் என்றார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .