2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'223 பேர் வாங்கிவிட்டனர்'

George   / 2016 நவம்பர் 30 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்.

'நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை  நாடாளுமன்ற உறுப்பினர்கள் 223 பேர் பெற்றுவிட்டார்கள். இன்னும் இருவர் மாத்திரமே எஞ்சியுள்ளனர்' என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் புதன்கிழமை இடம்பெற்ற, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

'தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை  வேண்டாம் என்று சொல்லியவர்கள் அனைவரும் அந்த அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்டுவிட்டனர்.

இன்னும் இருவர் மாத்திரமே அதனைப் பெற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் இருவரும் ஆளும் கட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்' என அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .