2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

2017 பிற்பகுதியில் ‘சின்ன’ தேர்தல்

Gavitha   / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல், எதிர்வரும் 2017ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இடம்பெறுமென, உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் நாடாளுமன்ற அவை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.  

பிரதேச சபைகள், நகரசபைகள் இன்றி, அரசாங்கத்தால் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியாதுள்ளது. அதனால், இந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை விரைவில் நடத்துமாறு, தானும் வலியுறுத்தியுள்ளதாக, அமைச்சர் குறிப்பிட்டார்.  

கண்டியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .