2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘பக்கச்சார்பற்ற விசாரணை இடம்பெறும்’

Kogilavani   / 2016 ஒக்டோபர் 26 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

கொக்குவில் பகுதியில், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில், பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்படும் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார்.  

பொலிஸார் மேற்கொண்டுவரும் விசாரணைகள் முழுமையாகப் பூர்த்தியடைந்ததும், சுயாதீன விசாரணையொன்றை நடத்துவதா என்பது பற்றி அரசாங்கம் தீர்மானிக்கும் என்றும் கூறினார்.  

மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு தொடர்பில், 23/2 நிலையியற் கட்டளையின் கீழ், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே, பிரதமர் இதனைத் தெரிவித்தார். பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தமை குறித்து கவலையளிப்பதுடன், இந்தச் செய்து சகலரையும் அதிர்ச்சியடையச் செய்ததாகவும் பிரதமர் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .