2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘பயமின்றி போய் வாருங்கள்’

Princiya Dixci   / 2017 ஜனவரி 05 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

“தற்போதைய அரசாங்கத்தை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த நாட்டில் இருக்கும்போதே கவிழ்ப்பேன்.

அவர் வெளிநாடு சென்றிருக்கும் சந்தர்ப்பம் பார்த்து, நாட்டைக் கவிழ்க்க வேண்டிய அவசியம் இல்லை” என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தான், அடுத்த வாரம் சுவிட்சர்லாந்துக்குச் செல்லவுள்ளதாகவும், அப்போது முடி​ந்தால், இந்த அரசாங்கத்தைக் கவிழ்த்துக் காட்டட்டும் என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்திருந்த கருத்துக்கு பதில் தெரிவிக்கும் வகையிலேயே, மஹிந்த ராஜபக்ஷ, மேற்கண்டவாறு கூறினார்.

பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில், புத்தாண்டின் வேலைகளை, மஹிந்த ராஜபக்ஷ, நேற்று ஆரம்பித்தார். இதன்போது, பிரதமரின் கருத்து தொடர்பில், ஊடகவியலாளர்கள் சிலர், கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அவர், “பிரதமர், பயமின்றி வெளிநாட்டுக்குச் சென்று வரலாம். நாங்கள், முதுகில் கத்தியால் குத்தமாட்டோம். அவர் நாட்டில் இருக்கும் போது தான், இந்த ஆட்சியைக் கவிழ்ப்பேன்” என்றார்.

அத்துடன், “வொக்ஸ்வெகன் தொழிற்சாலை ஒன்றுக்கு, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. உண்மையில் அது, வொக்ஸ்வெகன் தானா என்ற நம்பிக்கை இல்லை. ஆனால், அந்தக் காணி, மிகப்பெறுமதி வாய்ந்தது. பல்கலைக்கழக மொன்றுக்காகவே, அதனை ஒதுக்கியிருந்தோம். தற்போது அதை, நிறுவனமொன்றுக்குக் கொடுத்துவிட்டார்கள். இங்கு தயாரிக்கப்படும் ஒரு காரையேனும், வெளிநாட்டுக்கு அனுப்ப முடியாமல் போய்விடும். இறுதியில், பாவனைக்குதவாத கார்களைத் தயாரித்து, இலங்கையர்களுக்கு வழங்க வேண்டியது தான்” என்று, அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .