Princiya Dixci / 2017 ஜனவரி 02 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியல் அதிகார மட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்களினூடாக மக்களுக்கான கடமைகளை நிறைவேற்றும் முக்கிய பொறுப்பு அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. அபேகோன் தெரிவித்தார்.
பிறந்திருக்கும் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் முதலாவது நாளை முன்னிட்டு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (02) முற்பகல் நடைபெற்ற ஜனாதிபதி அலுவலக பணிக்குழாத்தினருடனான சந்திப்பின்போதேஇ ஜனாதிபதியின் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.
ஒரு பாரிய யுகப் புரட்சியைத் தொடர்ந்து ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேனஇ கடந்த 02 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களினூடாக நாட்டின் அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கு முன்னெடுத்த நிகழ்ச்சித் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அரச அதிகாரிகளுக்கும்; நன்றி தெரிவித்தார்.
'நாட்டின் அரச தலைவருக்கு நெருக்கமாகவுள்ள ஊழியர் பிரிவான ஜனாதிபதி அலுவலகப் பணிக்குழாம் தமது கடமைப் பொறுப்புக்களை நிறைவேற்றுகின்றபோதுஇ ஜனாதிபதியினதும் நாட்டினதும் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதியின் செயலாளர்இ ஒரு நபரின் மூலம் ஏற்படும் தவறு சிலநேரங்களில் முழு அரச பொறிமுறைக்கும் விரும்பத்தகாத பாதிப்புகளை ஏற்படுத்திவிட முடியும் எனக் குறிப்பிட்டார்.
அனைவருக்கும் நன்மைகள் கிடைக்கத்தக்கத் துரித அபிவிருத்தியின் மூலம் 2017ஆம் ஆண்டு வறுமையை ஒழித்துக்கட்டுவதற்கும்இ இலங்கை மக்களுக்குப் பாதுகாப்பான ஒரு எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கும் மக்களின் எதிர்பார்ப்புளை நிறைவேற்றுவதற்கும் பிறந்திருக்கும் புத்தாண்டில் அனைவருக்கும் பலமும் தைரியமும் கிடைக்க வேண்டுமென செயலாளர் வாழ்த்தினார்.
இந்த சந்திப்பில் ஜனாதிபதி அலுவலகத்தின் அனைத்து ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
7 minute ago
19 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
19 minute ago
26 minute ago