2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘மேல் மாகாணம் மாநகரமாகும்’

Gavitha   / 2016 நவம்பர் 01 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நகரங்களை அடிப்படையாகக் கொண்டே, உலகப் பொருளாதாரம் நிலைத்திருக்கின்றது. இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, மேல் மாகாணத்தை, பாரிய நகரமாக்கும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படும்” என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

இதற்கமைய, உலகின் சிறந்த தொழில்நுட்பங்களை ஒன்றுதிரட்டி, 2020ஆம் ஆண்டில், மேல் மாகாணத்தை, பாரிய நகரமாக அபிவிருத்தி செய்வதாகவும் இதன் மூலம், இந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதாகவும், பிரதமர் குறிப்பிட்டார்.  

உலக நகரதின நிகழ்வு, பத்தரமுல்லயில் அமைந்துள்ள சுஹுருபாயவில், நேற்றுத் திங்கட்கிழமை (31) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.  

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “எதிர்காலத்தில் எம்மால் முன்னெடுக்கப்பட வேண்டிய பல வேலைத்திட்டங்கள் உள்ளன. அதில், மாநகரை உருவாக்குவதென்பது, கடினமான விடயமாகும். அதனை நாம், அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிடம் ஒப்படைத்துள்ளோம்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .