2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘மக்கள் போராட்டம் வென்றது’

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 19 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கவிதா சுப்ரமணியம்

‘கடந்த சில நாட்களாக, மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தினாலேயே, இந்த 730 ரூபாய் சம்பளத்துக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது’ என்று இராஜாங்க கல்வியமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

இது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த அவர் கூறியதாவது,  

“இத்தனை நாட்களாக, தங்களுக்கு 1,000 ரூபாய் சம்பளம் வேண்டும் என்று கோரி, மலையக பெருந்தோட்ட மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகவே நான் இதனைக் கருதுகின்றேன். நான் தான் செய்தேன், நீதான் செய்தாய் என்று கூறுவதை விட, மக்களது போராட்டம் வெற்றியளித்துள்ளதென்று கூறுவதே சரியானது. இந்தச் சம்பளம் போதாது என்றாலும், இது ஒரு வெற்றியாகும். அதேபோன்று , மக்களுக்கு வழங்க வேண்டிய நிலுவையும் பெற்றுக்கொடுக்கப்படல் வேண்டும். 

1,000 ரூபாய் சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு நாம் எப்போதும் இடைஞ்சலாக இருக்கவில்லை. கிடைத்திருந்தால் நாம் சந்தோஷப்பட்டிருப்போம்”  என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .