2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மசாஜ் நிலையம் சென்ற உப பொலிஸ் பரிசோதகருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 03 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு, தெல்வத்தை சந்திக்கு அருகில் அமைந்துள்ள ஆயர்வேத மசாஜ் நிலையத்தில், மசாஜ் செய்துவிட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட புத்தளம் பொலிஸ் பிரிவில் பணியாற்றும் 35 வயதுடைய உப பொலிஸ் பரிசோதகரை, எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிர வெலிவத்த உத்தரவிட்டார்.

இரு பிள்ளைகளின் தந்தையான குறித்த உப பொலிஸ் பரிசோதகர், ஓர் அரச ஊழியராகப் பணியாற்றிக்கொண்டு, மசாஜ் நிலையத்துக்குள்  பலாத்காரமாக நுழைந்தது மாத்திரமின்றி, பலாத்காரமாக மசாஜ் செய்துகொண்டதாக, சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை, குறித்த மசாஜ் நிலையத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மடக்கிப்பிடித்து, நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பியலால் தஸநாயக்க, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன கமகே ஆகியோரின் ஆலோசனையின் கீழ், நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சமன்திலக்க வெலிவிட்ட தலைமையிலான குழுவினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X