Princiya Dixci / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

ப. பிறின்சியா டிக்சி
தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்ததன் பின்னர் தேசிய பாதுகாப்பு அல்லது வேறு காரணங்களைக் காரணம் காட்டி தகவல்களை வழங்க மறுக்கும் திணைக்களங்கள் அல்லது நிறுவனங்கள் தொடர்பில் தகவல் அறியும் ஆணைக்குழுவில் முறையிடுவதன் மூலம் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியுமென இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் தெரிவித்தது.
தகவல் அறியும் சட்டம் என்பது அனைத்துப் பிரஜைகளுக்கும் பொதுவானது எனவும் ஊடகவியலாளர்கள் அல்ல, எவர் வேண்டுமானாலும் தகவல்களைப் பெற்றுக்கொள்ள உரிமையுடையவர்கள் எனவும் பத்திரிகை ஸ்தாபனத்தின் தகவல் உரிமைச் சட்டச் செயற்றிட்டத்தின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான ராதிகா குணரத்ன தெரிவித்தார்.
'தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரஜைகளின் கையேடு' நூல் அறிமுக நிகழ்வு, கொழும்பு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (05) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த ராதிகா குணரட்னம், இந்த விடயங்களை வலியுறுத்தினார்.
'தகவல்களைப் பெற்றுக்கொள்ள அனைவருக்கும் உரிமையுள்ளது. தகவல்களை அறிந்துகொள்வது தொடர்பில் சாதாரண பிரஜைகளுக்கு பூரண அறிவு காணப்படுவதற்கு வாய்ப்பில்லை. ஆகவே, பிரஜைகள் சார்பாகச் செயற்படும் ஊடகவியலாளர்களுக்குத் தவல்களை வழங்க வேண்டியது அவசியம். ஊடகவியலாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை.
சட்டத்தின் 43ஆவது பந்திக்கு அமைய, அமைச்சுக்கள், அரச திணைக்களங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் அனைவரும் இதற்குள் உள்ளடங்குவார்கள்.
ஆகவே, தகவல்களை வழங்க வேண்டியது அவர்களது கடமை. தேசிய பாதுகாப்புக் கருதி எவராவது தகவல்களை வழங்க மறுக்கும் பட்சத்தில் தகவல் அறியும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முடியும்.
அந்த சந்தர்ப்பத்தில் குறித்த நபர், தேசியப் பாதுகாப்பு என்றால் என்ன என்பது தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும். ஆகவே, அதன் பின்னர் அது தொடர்பில் இறுதி தீர்மானத்துக்கு வர முடியும். எனவே, தகவல்களை வழங்குவது கட்டாயம்.'
சாதாரண பிரஜைகளும் தகவல் அறியும் சட்டத்தை அறிந்துகொள்ளும் வகையில் வினா - விடை வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நூல் வெளியீட்டில், இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பிரதம நிறைவேற்ற அதிகாரி குமார் லோபஸ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
41 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
56 minute ago