2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'மஹிந்தவுக்கு முடியாது'

George   / 2016 டிசெம்பர் 30 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிறக்கவுள்ள 2017 ஆம் ஆண்டில் அரசாங்க மாற்றம் ஏற்படுத்துவதா இல்லையா என்பது குறித்து தீர்மானிப்பது, ஜனாதிபதி மைத்திபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரால் மாத்திரமே முடியும் என அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை 2017ஆம் ஆண்டு கவிழ்த்து விடுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தமை தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அவர் இதனை கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் அளவுக்கு வாக்கு பலம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“2017 ஆண்டுக்குள் இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதே எனது நோக்கம்” என் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .