2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

2,500 ரூபாய் தண்டத்தை எதிர்த்து கறுப்புப்பட்டி போராட்டம்

Princiya Dixci   / 2016 நவம்பர் 14 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட யோசனையில் முன்வைக்கப்பட்டுள்ள ஆகக் குறைந்த தண்டப் பணமான 2,500 ரூபாய்க்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புப்பட்டிப்போராட்டம் நடத்தப்படவுள்ளதாக இலங்கை மோட்டார் சைக்கிள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இந்த யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சகல சாரதிகளும் தங்களுடைய வாகனங்களில் கறுப்புப் பட்டிகளை கட்டிவிடுமாறும் அந்தச் சங்கத்தின் செயலாளர் சிந்தன அமரசிங்க தெரிவித்தார். 

ஆகக் குறைந்த தண்டப் பணத்தை விடவும், சாரதியொருவர் தன்னுடைய வாகனத்துக்குக்காக மாதமொன்றுக்கு செலவிடும் தொகையானது அதிகமாகும் என்றும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.  

யாரும், வேண்டுமென்றை விபத்தை ஏற்படுத்த மாட்டார்கள். வீதிகளில் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலின் போது, மிகவேகமாக செல்வதற்காகவே இரண்டு சக்கர வாகனங்கள் (மோட்டார் சைக்கிள்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறைமையாகும். 

இந்த நடைமுறைக்கு சர்வதேசம் ஆதரவு நல்கியது. எனினும், அதனை புரிந்துகொள்ளாத, இந்த அரசாங்கம் சாரதிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவர்களின் வெறுப்பைச் சம்பாதித்துகொள்ள முயல்கிறது.

இதேவேளை, வீதிகளில் ஒழுங்கை வரம்பு தொடர்பில், எமது நாட்டில் எவ்விதமான அவதானமும் செலுத்தப்படவில்லை.

இவ்வாறான நிலையில், இந்தத் தண்டப் பணம் அறிவிப்பானது போக்குவரத்துப் பொலிஸாரின் மோசடி செயற்பாடுகள் அதிகரிக்கும் என்பதுடன் பொலிஸாரின் மீது மக்கள் வைத்திருக்கின்ற அவநம்பிக்கையை இன்னுமின்னும் உறுதிப்படுத்தும் செயற்பாடாகவே இது அமையும் என்றும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .