2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘விட்டுக்கொடுப்புகள் பலவீனமல்ல’

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

“ஆட்சிமுறைமை தொடர்பில், மக்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். பிளவு படுத்தப்பட முடியாத ஒரேநாடு என்ற ஏற்பாடு அரசியலமைப்பில் உள்வாங்கப்படவேண்டும் என்பதுடன், ஒரே நாட்டுக்குள் நிர்வாக அதிகாரங்களைப் பகிரமுடியும் என்று சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விட்டுக்கொடுப்புகளை பலவீனமாக அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது” என்றும் சுட்டிக்காட்டியது. 

புதிய அரசியலமைப் பொன்றை இயற்றுவதற்கான எமது ஆதரவை, அதன் பின்னர் நிறைவேற்றப்பட வேண்டியிருக்கும் யுத்தத்தின் விளைவான ஏனைய விடயங்களை தட்டிக்கழித்து விடுவதற்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்றும் சுட்டிக்காட்டியது. 

நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற, வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,  

“ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இலங்கையும் இணை அணுசரனை வழங்கியுள்ளது. இன்று உலகில் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் ஏற்கனவே வழங்கியுள்ள உறுதிமொழிகளில் இருந்துதப்பித்துவிடலாம் என்று கருதினால் அது தப்பாகிவிடும். ஏனெனில், மேற்படி தீர்மானமானது எம்மீது திணிக்கப்பட்டதல்ல. நல்லிணக்கத்தை ஏற்படுத்த பல்வேறு விடயங்களை நிறைவேற்றுவதாக உறுதியளித்து நாமே அதற்கு இணை அணுசரணை வழங்கியுள்ளோம்.  

கடந்த காலங்களில் இடம்பெற்ற விடயங்களின் மீள்நிகழாமையை உறுதிபடுத்த கடந்தகால விடயங்கள் பற்றிய மீளாய்வு தேவையாக இருக்கிறது. அந்தவகையில், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தொடர்பானசட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளமையை வரவேற்கிறோம். எனினும், அடுத்த நகர்வில் தாமதம் நிலவுகிறது. இவ்வாறான தாமதங்களை காலத்தை கடத்தி தப்பிப்பதற்கான வழியாக சிலர் கருதுகின்றனர்.  

சகல மக்களும் சம உரிமை மற்றும் அந்தஸ்த்துடன் வாழ்வதற்கான நல்லிணக்கம் அவசியமாகும். எனினும், அனைத்தும் உடனடியாக நடந்துவிடும் என்று கூற முடியாது. தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் இருக்கின்றன. முதலாவதாக அதற்கு அரசியலமைப்பொன்றை இயற்றவேண்டும். அதன் பின்னர் யுத்தத்தின் விளைவாக உருவான பல விடயங்களை தீர்க்கப்படவேண்டியுள்ளன.  

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கான உறுதிமொழிகளை நிறைவேற்ற நாம் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்போம். அந்தவகையில், அரசியலமைப்பு இயற்றல் நடவடிக்கையை தற்போதுமைய ஸ்தானத்தை அடைந்துள்ளது. இதுவரை 44 கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. 6 உப- குழுக்களின் அறிக்கைகள் அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.  

இந்தநாட்டில் யுத்தம் உருவானமைக்கான அடிப்படை காரணங்கள் தீர்க்கப்படவேண்டும். புதிய அரசியலமைப்பு இயற்றப்பட்டதன் பின்னர் நிறைவேற்றப்பட வேண்டிய ஏனைய விடயங்களும் இருக்கின்றன. அரசியலமைப்பு நடவடிக்கையின் மூலம் ஏனைய விடயங்களை நிறைவேற்றாமல் ஏமாற்றிவிடலாம் என்று அர்த்தப்படுத்துவதற்கோ அல்லது தட்டிக்கழிப்பதற்கோ எமது ஆதரவைபயன்படுத்த முயற்சிக்கக்கூடாது. 

13 ஆவது அரசியலமைப்பு அமுலாக்கத்திலும் இவ்வாறான விடயங்கள் தான் இடம்பெற்றிருந்தன. ஒரு இலட்சத்துக்கும் அதிகமான எமது மக்கள் பலியானது 13 ஆவது அரசியலமைப்புதிருத்தம் கொண்டுவரப்பட்டதன் பின்னரே தவிர அதற்கு முன்னரல்ல. 13 ஆவது திருத்தத்தை முழுமையாகநடை முறைப்படுத்துவதற்காக இத்தகைய தியாகங்களைச் செய்யவில்லை.  

பிரச்சினை என்பது விடுதலைப் புலிகள் கிடையாது. விடுதலைப் புலிகள் என்பது இந்த பிரச்சினையின் வெளிப்படாக இருந்தது. ஆகையால், அவர்கள் தற்போது இல்லாமையினால் இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டதாக அர்த்தம் கிடையாது. பிரச்சினையின் வெளிப்பாடுமட்டுமே அதன்மூலம் இல்லாமல் போயுள்ளது. பயங்கரவாதம் மட்டுமே பிரச்சினை கிடையாது. அதுமுடிந்துவிட்டது என்று அர்த்தப்படுத்தினால் அதுதவறாகும்.  

நாம் விட்டுக்கொடுப்புகளைசெய்கிறோம். எனினும்,அடிப்படையில் மக்களின் அபிலாiஷகளில் மாற்றங்கள் ஏற்படவில்லை. இணக்கப்பாடொன்றுஅவசியம் என்பதனாலேயேநாம் இந்தவிட்டுக்கொடுப்புகளைசெய்கிறோம். தைபலவீனமாகஎடுத்துக்கொண்டால் அதுதவறாகும்.  

கடந்தகாலங்களில் இடம்பெற்றவிடயங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாதவாறு அவற்றுக்குதீர்வு காணப்பட வேண்டும். அதைசெய்யாவிட்டால் எதிர்காலத்தில் அவை மேலும் கடுமையான விடயமாகிவிடும். அரசியலமைப்பு இயற்றும் நடவடிக்கையானது நேர்மையானதாக இருக்க வேண்டுமேதவிர, ஏமாற்றும் நோக்கிலானதாக இருக்கக்கூடாது’என்று தெரிவித்தார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .