Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 ஒக்டோபர் 26 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள், பொலிஸாரை நோக்கி மிகவேகமாகச் செலுத்தப்பட்டு வந்ததாகவும் பொலிஸார் வானத்தைநோக்கி சுட்டபோது ஒரு மாணவன் மீது துப்பாக்கிச் சன்னம் பாய்ந்ததாகவும் ஆரம்ப விசாரணைகள் மூலம் மூலம் தெரியவந்திருப்பதாக சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலியான சம்பவம் தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தக் கேள்விக்கு முழுமையான பதிலை வழங்கும் போதே அமைச்சர் சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இதே விவகாரத்தை முன்வைத்து, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவும் கேள்வியெழுப்பினார்.
இதேவேளை, இந்தவிவகாரம் உள்ளிட்ட கற்பிட்டி, மன்னார் மற்றும் கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கேள்வியெழுப்பினார்.
அவர்களின் கேள்விக்கெல்லாம் பதிலளித்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
“யாழ்ப்பாணத்தில் அதிகரித்திருக்கும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக, சம்பவதினம் இரவு முதல் காலை வரை விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன் ஒரு கட்டமாகவே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், சந்தேகத்துக்கு இடமான மோட்டார் சைக்கிள் நிறுத்தாமல் செல்ல முற்பட்டபோது அதைத் தடுக்க முற்பட்டார்கள். ஏதும் குற்றச் செயலைச் செய்வதற்குச் செல்கிறார்கள் அல்லது செய்துவிட்டுச் செல்கிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே, பொலிஸார் அவர்களைத் தடுத்துள்ளனர்” என்றார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “வடக்கு கிழக்கில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அமைதியை நிலைநாட்டவும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்பவும், அரசாங்கம் முயன்று வருகிறது. கொக்குவில் சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை கிடைத்துள்ளது. முழுமையான விசாரணை, இன்னும் நிறைவடையவில்லை. கடந்த 20ஆம் திகதி இரவு 11.55 மணியளவில் இந்த சம்பவம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு அருகில், ஐந்து பொலிஸார் இரவுநேர ரோந்தில் ஈடுபட்டிருந்தனர்.
இது தவிர இரு பொலிஸார், வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்தார்கள். அதிக வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு, பொலிஸார் சைகை காட்டியுள்ளனர். அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாது பயணித்துள்ளதோடு, வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரும் அதனை நிறுத்துமாறு சத்தமெழுப்பியுள்ளனர்.
மாணவர்கள், பொலிஸாரை பயமுறுத்தும் வகையில் அவர்களை நோக்கி மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளனர். இதன்போது பொலிஸார் வானத்தை நோக்கிச் சுட முயன்றபோது, அதிலிருந்து வெளியான துப்பாக்கிச் சன்னம், ஒரு மாணவர் மீது பாய்ந்துள்ளது. மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. அங்கிருந்த பொலிஸார், இருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்தபோதும், அவர்கள் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற மாணவர் மீது துப்பாக்கிச் சூடு பட்டுள்ளதோடு, பின்னால் அமர்ந்து சென்ற மாணவர், விபத்தினால் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவர்கள் இருவரும் போதையில் இருந்துள்ளனர்.
பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் பெயரில் கொக்குவில் சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நியாயமானதும், வெளிப்படையானதுமான விசாரணை நடத்தப்படும். சம்பவ நேரம், இரு பொலிஸ் அதிகாரிகளிடம் ரி56 ரக துப்பாக்கிகள் இருந்துள்ளன. சப் இன்ஸ்பெக்டரிடம் சிறிய ரக துப்பாக்கியொன்று இருந்துள்ளது. சிவில் செயற்பாடுகளின்போது, சிறிய ரக ஆயுதங்களை பொலிஸாருக்கு வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என்றார்.
சுன்னாகம் வாள் வெட்டு
கடந்த 23ஆம் திகதி சுன்னாகம் பகுதியிலுள்ள கடையொன்றுக்கு அருகில், இரு புலனாய்வு அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் பொலிஸாரை இலக்குவைத்து மேற்கொள்ளப்படவில்லை. கடையைக் கொள்ளையிடவந்த கும்பலைத் தடுக்க கடமையில் இருந்த மூன்று பொலிஸார் முயன்றுள்ளனர். இதன்போது, வாள் வெட்டுத் தாக்குதலில் இருவர் காயமடைந்தனர் என்றார்.
10 minute ago
33 minute ago
49 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
33 minute ago
49 minute ago
54 minute ago