2025 மே 19, திங்கட்கிழமை

'வெள்ளை வான் பற்றி வாய்த்திறந்தால் மயானத்தில் இருப்பாய்'

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு தொலைபேசியூடாக மரண அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் ஒருவரை இனங்கண்டுள்ளதாகவும் அவரை, பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்துள்ளதாகவும் நாரஹேன்பிட்டிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.

விசாரணைக்காக அவர், இன்று செவ்வாய்க்கிழமை அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனக்கு தொலைபேசியின் ஊடாக பல முறை மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தனது முறைபாட்டில் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, வெள்ளைவேன் விவகாரம் தொடர்பில் வாய்திறந்தால் மயானத்திலேயே இறுதியாக இருப்பாய் என்றும் மரண அச்சுறுத்தல் அழைப்பை ஏற்படுத்தியவர்கள் அச்சுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X