Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘வடக்கு - கிழக்கு இணைப்புக்கு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தேசியத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆதரவு வழங்கி ஏற்றுக்கொண்டிருந்ததாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்தானது, உண்மைக்குப் புறம்பானது.
தலைவர் அஷ்ரப், ஒருபோதும் வடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஆதரவளித்து ஏற்றுக்கொள்ளவில்லை என்பது, அவருடன் ஆரம்ப காலத்திலிருந்து அரசியல் பயணத்தில் ஒன்றாக பயணித்த எனக்குத் தெட்டத் தெளிவாக தெரியும்” என, மு.கா.வின் ஆரம்பகால உறுப்பினரும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கு - கிழக்கு மாகாணங்கள், யாருடைய அனுமதியும் இல்லாமல் இந்திய அரசாங்கத்தின் அழுத்தம் மற்றும் பலாத்காரத்தினால், இலங்கை அரசாங்கத்தின் பூரண அனுமதியின்றி, இரவோடு இரவாக இணைக்கப்பட்ட ஒன்றாகும். ‘இணைந்த வடகிழக்கை பிரிப்பதற்கான எந்த சாத்தியக் கூறுகளும் இல்லை.
வடகிழக்கை பிரிக்கவே முடியாது’ என்ற நிலைப்பாடும் சூழலும் நிலவிய போதிலும், வடகிழக்கில் உள்ள முஸ்லிம்களுக்கு, தனியான அதிகாரமுள்ள ஒரு முஸ்லிம் மாகாணம் வேண்டும் என்ற கோஷத்தையே, தலைவர் அஷ்ரப் முன்வைத்தார்.
அதில், கிழக்கிலே உள்ள முஸ்லிம் பிரதேசங்கள், வடக்கிலே உள்ள மன்னார் முசலி உள்ளிட்ட பிரதேசங்கள் உள்ளடக்கப்பட்டு தனியான அதிகாரமுள்ள ஒரு முஸ்லிம் மாகாணமாகவே அது அமைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார். அவ்வாறு, முஸ்லிம்களுக்கு தனி மாகாணம் ஏற்படுத்திக் கொடுக்கும் பட்சத்தில், இணைந்த வடகிழக்கில், இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு, தலைவர் இணக்கம் தெரிவித்திருந்தார்.
தலைவர் அஷ்ரபுடன் 1989ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தில் இருந்தேன். 1987ஆம் ஆண்டு தொடக்கம், நாம் இருவரும் மாகாண சபையிலும், வடகிழக்கு பிரச்சினை தொடர்பான சகல பேச்சுக்களிலும் கலந்து கொண்டுள்ளோம். ஆகவே, இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்கு அதிகாரமுள்ள தனி முஸ்லிம் மாகாணத்தை ஏற்றுக்கொள்கின்ற போது மாத்திரமே, இணைந்த வடகிழக்குக்கு, முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் என பல்வேறு கோரிக்கைகளை நாம் முன்வைத்திருந்தோம்.
தனி முஸ்லிம் மாகாணத்துக்கு தமிழ்த் தரப்பு ஆதரவளிக்குமானால், இணைந்த வடகிழக்கு தொடர்பான நிலைப்பாட்டுக்கு தலைவர் இணக்கம் தெரிவித்திருந்தார். மாறாக, முஸ்லிம்களுக்கு தனியான மாகாணம் இல்லாமல் ஒருபோதும் வடகிழக்கு இணைப்பை, தலைவர் அஷ்ரப் ஏற்றுக்கொள்ளவில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.
10 minute ago
20 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
20 minute ago
59 minute ago
1 hours ago