2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘வடமாகாண அரசியல்வாதிகள் இனவாதிகள்’

Thipaan   / 2016 நவம்பர் 11 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண அரசியல்வாதிகள், இனவாதக் கொள்கைகளில் இருந்து இன்னமும் மாறவில்லை என, சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் பிரதியமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்தார். 

கொழும்பில், நேற்று வியாழக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “சிவாஜிலிங்கம் போன்ற அரசியல்வாதிகளே இவ்வாறு இனவாதத்தை கையாண்டு வருகிறார்கள்” எனச் சுட்டிக்காட்டினார்.  

“அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், ஹிலாரி கிளிண்டன் வெற்றியீட்ட வேண்டும் என்பதற்காக, சிவாஜிலிங்கம், தேங்காய் உடைத்து வழிபாடுகளை மேற்கொண்டிருந்தார். அதனால் தான் அவர், தேர்தலில் தோல்வியடைந்தார்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .