2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘வருகிறது சுப்பர் மூன்’

Princiya Dixci   / 2016 நவம்பர் 09 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘சுப்பர் மூன்’ நிலவு, பூமிக்கு மிக அருகில் வரும் நிகழ்வு, எதிர்வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறுகிறது.

70 ஆண்டுகளுக்கு பிறகு, மிகவும் பிரகாசமான சுப்பர் மூனாக, இது அமையுமென, நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறானதொரு அறிய நிகழ்வு இதற்கு முன்னர் 1948ஆம் ஆண்டே இடம்பெற்றுள்ளது. 

சுப்பர் மூன் என்றால், நிலவானது பூமிக்கு மிகமிக அருகில் வரும் நிகழ்வாகும். வழக்கமாக 3 இலட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோமீற்றர் தொலைவில் சுற்றிவரும் நிலவு, அன்றைய தினம் அதன் தொலைவில் இருந்து பூமியை நெருங்கி வர உள்ளதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

சுப்பர் மூன் நிகழ்வு இடம்பெறும் போது, நிலவானது வழக்கத்தை விடவும் மிகப் பெரியதாகவும், அத்துடன், 30 மடங்கு வெளிச்சத்துடன் காட்சியளிக்கும் என்றும் நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 

டுபாயில் உள்ளவர்கள் 14ஆம் திகதி மாலை 5:52க்கு இந்த நிகழ்வை முழுமையாக காணமுடியும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .