Gavitha / 2017 ஜனவரி 02 , மு.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
இவ்வாண்டில், இலங்கை எதிர்கொள்ளவுள்ள வரட்சிக்கு முகங்கொடுக்கும் வகையிலான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த கமத்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ரொஹான் விஜேகோன், நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு நிலவாமலிருக்கும் வகையில், அத்திட்டம் செயற்படுத்தப்படும் என்றார்.
இரண்டரை மாதங்களில் அறுவடையை பெற்றுக்கொள்ளக்கூடிய பீ.ஜீ.250 ரக நெல்லைப் பயிரிட்டு, விவசாயிகளிடமிருந்து ஆயிரம் புசல் நெல்லைக் கொள்வனவு செய்யவதற்காக, அவ்வகை நெல்லினங்களை, அடுத்த சிறுபோகத்தில் பயிரிடுவதற்காக விநியோகித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைக்கு கிடைக்கப்பெறும் மழையைக் கொண்டு. மேலும் 4 இலட்சம் ஹெக்டெயாரில் நெற்பயிர்ச் செய்கையை மேற்கொள்ள எதிர்ப்பார்ப்பதாகத் தெரிவித்த அவர், அதன் மூலம், எதிர்வரும் ஜூலை மாதம் வரையில், அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.
நெற்பயிர்ச் செய்கை மாத்திரமல்ல, மரக்கறி மற்றும் பழப் பயிர்ச்செய்கையும், வரட்சியால் பாதிக்காத வகையில், விவசாய அமைச்சருடன் இணைந்து, திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக, பணிப்பாளர் நாயகம், மேலும் கூறினார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago