Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 ஜனவரி 02 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
'எதிர்வரும் சில மாதங்களில், கடும் வரட்சியுடன் கூடிய கோடை காலத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளதால், எமது அமைச்சானது, நன்கு திட்டமிட்ட அடிப்படையில் அதற்கு முகங்கொப்பதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருகின்றது' என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
'இந்த ஆண்டில், நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு மேற்கொள்ளவுள்ள பல்வேறு செயற்றிட்டங்களுக்கு மேலதிகமாக, ஜனாதிபதி கூறியதைப்போன்று வறுமை ஒழிப்பு, வீண் விரயத்தைத் தவிர்த்தல் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தை பெருமளவு குறைப்பதிலும் நோக்கமாகக் கொண்டு பல்வேறு பணிகளை ஆற்றவுள்ளோம்' என்றும் அவர் கூறினார்.
நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சில், இன்று (02) நடைபெற்ற புதுவருட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் இதனைக் கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,
'உலக வங்கியினதும் ஆசிய அபிவிருத்தி வங்கியினதும் நிதியுதவியுடனும் வெளிநாட்டு உதவிகளுடனும் நாடளாவிய ரீதியில் பல்வேறு செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
2030ஆம் ஆண்டை இலக்காகக்; கொண்டு, பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளை காண்பதில் அரசு காட்டிவரும் அக்கறைக்கு ஏற்ப, நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் கீழ் உள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களம் என்பவற்றினூடாக பல பில்லியன் ரூபாய் செலவில், பாரிய செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன' என்றார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago