Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெறுமதி சேர் வரித் திருத்தச் சட்டமூலத்துக்கு (வற்) எதிராக, மேலும் மூன்று மனுக்கள், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதற்கான பிரதிகள் தனக்குக் கிடைத்திருப்பதாக, சபாநாயகர் கருஜயசூரிய, நாடாளுமன்றத்தில், நேற்று வியாழக்கிழமை (20) அறிவித்தார்.
நாடாளுமன்றம், சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில், நேற்று வியாழக்கிழமை காலை 10.30க்கு கூடியது. இதனையடுத்து இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின் போதே, இவ்விடயத்தை தெரிவித்த கரு ஜயசூரிய, தனது அறிவிப்பில் மேலும் கூறியதாவது,
“அரசியலமைப்பின் 121(1) உறுப்புரையின் கீழ், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பெறுமதிசேர் வரித் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதற்கான பிரதி எனக்குக் கிடைத்திருப்பதாக, 07.10.2016 அன்று சபைக்கு அறிவித்தேன்.
தற்போது, இந்த பெறுமதி சேர் வரிச் சட்டமூலத்துக்கு எதிராக மேலும் மூன்று மனுக்கள், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதற்கான பிரதிகள் எனக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, அரசியலமைப்பின் பிரகாரம், ஒக்டோபரில் சமர்ப்பிக்கப்பட்ட குற்றவியல் மற்றும் நீதிச் சேவை ஆணைக்குழு திருத்தச் சட்டமூலத்தில், கடந்த 17ஆம் திகதி, நான் கையெழுத்திட்டு அங்கிகாரமளித்துள்ளேன்” என்றார்.
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago