2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘வற்’ சட்டமூலம் முரணானது அல்ல

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 26 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்   

பெறுமதி சேர் வரி (வற்) சட்டமூலம், மற்றும் அதிலுள்ள ஒழு விதிகள் அரசியலமைப்புக்கு உட்பட்டதாக அமைந்துள்ளது என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (25) அறிவிக்கப்பட்டது.  

நாடாளுமன்றம், பிரதிச் சபாநாயகர் திலங்க சுமத்திபால தலைமையில் நேற்றுப் பிற்பகல் 1 மணிக்கு கூடியது. சபாநாயகர் அறிவிப்பின் போதே அவர் மேற்கண்ட அறிவிப்பை விடுத்தார்.   

‘வற்’ சட்டமூலத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீதான வியாக்கியானம் நாடாளுமன்றத்துக்குக் கிடைத்துள்ளது.   

அந்த வியாக்கியானத்தின் பிரகாரம் பெறுமதி சேர் வரி (வற்) தொடர்பான சட்டமூலம் மற்றும் அதிலுள்ள ஒழுங்கு விதிகள், அரசியலமைப்புக்கு முரணானதாக இல்லை என்று அறிவித்துள்ளது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .