Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாநூ கார்த்துகேசு
15 சதவீதமாக வற் வரி அதிகரிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் மே 2ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என, மக்கள் விடுதலை முன்னணியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
'இந்த வற் வரி விதிப்பின் மூலம் அப்பாவி மக்களே பாதிக்கப்படுகின்றனர். தேசத்தைக் கட்டியெழுப்பும் திட்டத்தின் கீழ், மின்சாரக் கட்டணம், தொலைத்தொடர்புக் கட்டணம், சில்லறைக் கடைகளுக்கு இந்த வற் வரி விதிக்கப்பட்டுள்ளது' என்றும் அவர் கூறினார்.
பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தொலைத்தொடர்புக் கட்டண விதிப்பானது, செல் வரி 2 சதவீதம், செஸ் வரி 24 சதவீதம், புதிய வரிவிதிப்பு முறையின் கீழ் 25 சதவீதம், வற் வரி 15 சதவீதம், தேசத்தைக் கட்டியெழுப்பும் திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட வரி 2 சதவீதம் என மொத்தம் 44 சதவீதமான வரி விதிப்பானது, பொதுமகனின் தலைமீது சுமத்தப்படுகின்றது.
ஒருவன் ஆயிரம் ரூபாய்க்கு தனது தொலைபேசிக்கட்டணத்தைச் செலுத்துவானாயின், அதில் 440 ரூபாயினை வரியாகச் செலுத்துகின்றான்' என்றார்.
'இலங்கைப் பிரஜையொருவரின் தனிநபர் மாதாந்த வருமானம் 3 இலட்சத்தைத் தாண்டுமேயேனால், அவருக்கும் வற் வரி விதிக்கப்படுவதுடன், தனிநபரின் வருமானமானது ஒரு வருடத்துக்கு 1 இலட்சத்தைத் தாண்டும் பட்சத்தில் அதற்கும் வற் வரி விதிக்கப்படுகின்றது. வற் வரி விதிப்பினையே இம்முறை அரசாங்கம், பொதுமக்களுக்குப் பரிசாக வழங்கியுள்ளது' என்று அவர் மேலும் கூறினார்.
24 minute ago
36 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
36 minute ago
45 minute ago
1 hours ago