2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீ லங்கன் நிறுவனத்தின் கீழ் மிஹின் லங்கா சேவைகள்

George   / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிஹின் லங்கா விமான நிறுவனத்தின் நடவடிக்கைகளை எதிர்வரும் 31ஆம் திகதி முதல் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் பொறுப்பேற்கவுள்ளது.

அதற்கமைய தொடர்ந்து மிஹின் லங்கா விமான நிறுவனம் ஊடாக மேற்கொள்ளவுள்ள விமான பயணங்கள் அனைத்தும் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளன.

தற்போது, மிஹின் லங்கா விமான சேவை ஊடாக பஹ்ரைன், மதுரை, டாக்கா, மஸ்கட், மாலே, சீசெல்ஸ், புத்தகயா உள்ளிட்ட இடங்களுக்கு விமான சேவைகள் இடம்பெற்று வருகின்றன.

மிஹின் லங்கா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானங்கள் இனி ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .