2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

1,316 கிலோகிராம் பீடி இலைகள் சிக்கின

Editorial   / 2025 ஜூன் 02 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், புனரின் கல்முனை முனை மற்றும் சம்பகுளம் கடற்கரை மற்றும் கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் 2025 மே 30 திகதி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1,316  கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

 

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான வேலுசுமணவுடன் இணைக்கப்பட்ட புனரின் கல்முனை முனையின் கடற்படைப் பிரிவினால், கல்முனை முனை மற்றும் சம்பக்குளத்தைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடல் பகுதிகளில் 2025 மே 30 ஆம் திகதி நடத்தப்பட்ட இந்த சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடற்கரையில் காணப்பட்ட் 15 சந்தேகத்திற்கிடமான பைகள் ஆய்வு செய்யப்பட்டன. கடற்படை நடவடிக்கைகளின் போது கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1,316 கிலோ மற்றும் 400 கிராம் பீடி இலைகளை கடற்படை பறிமுதல் செய்தது.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சமர்ப்பிக்கப்படும் வரை கடற்படையின் காவலில் வைக்கப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X