Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஒக்டோபர் 12 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் தங்கியிருந்த கஸ்தூரி (38), தன் கணவர் கணேசமூர்த்தி மற்றும் இரு மகன்களுக்காக பணம் சம்பாதிக்க சென்னை கொளத்தூரில் உள்ள தனம்மாள் முதல் தெருவில் இருந்து இரு மாடி குடியிருப்பின் முதல் தளத்தில் வாடகைக்கு தங்கினார்.
"நான் சென்னையில் வேலை செய்து பணம் அனுப்புகிறேன், நீங்கள் முகாமில் குழந்தைகளை பார்த்துக் கொள்ளுங்கள்," என்று கணவரிடம் கூறி வந்தவர், உண்மையில் எந்த வேலையும் செய்யாமல் உடலை முதலீட்டாக்கி பாலியல் தொழிலில் ஈடுபட்டு பணம் சம்பாதித்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அக்கம்பக்கத்தில் உள்ள துணி அயன் கடையில் வேலை செய்த மோசின் அன்சாரி (உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்) என்பவருடன் கஸ்தூரிக்கு பழக்கம் ஏற்பட்டது. தனிமையில் இருந்த கஸ்தூரி, "எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, உன்னை எனக்கு பிடித்திருக்கிறது, நாம் திருமணம் செய்துகொள்ளலாம்," என்று ஆசை வார்த்தைகளால் அவரை காதல் வலையில் வீழ்த்தினார்.
திருமணமானவர், இரு குழந்தைகளின் தாய் என்பதை மறைத்து அவருடன் ஒன்றிணைந்த கஸ்தூரி, மோசின் அன்சாரியின் சம்பளத்தை முழுமையும் வாங்கி வைத்துக்கொண்டதாகவும், அடிக்கடி பல ஆண்களுடன் தொலைபேசியில் பேசி வெளியேறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், ஒரு நாள் கஸ்தூரியின் செல்போனில் தன் கணவர், குழந்தைகளுடன் எடுத்த புகைப்படங்களைப் பார்த்த மோசின் அன்சாரி அதிர்ச்சியடைந்தார். "அது என் அண்ணன் மற்றும் அவரது குழந்தைகள்," என்று சமாதானப்படுத்தினாலும், பின்னர் கஸ்தூரியின் பாலியல் தொழில் பகீர் உண்மையாக வெளிப்பட்டது.
இதனால் கோபமடைந்த மோசின் அன்சாரி, "இனிமே இத்தொழிலை விட்டுவிடு," என்று சண்டையிட்டார். சமாதானமான பிறகு இருவரும் வெளியே சென்று திரும்பி, மாலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை நாலு குவாட்டர் மதுவை தாண்டி போதைக்கு ஆளானனர்.அப்போது இரவு 11 மணிக்கு கஸ்தூரிக்கு ஒரு அழைப்பு வந்தது.
அது பாலியல் தொழில் தொடர்பானதாக இருந்ததால், கோப உச்சத்தில் மோசின் அன்சாரி, போதையில் தள்ளாடிய கஸ்தூரியின் மார்பில் கடுமையாக தாக்கினார். ஏற்கனவே நெஞ்சு வலி உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு ஆளான கஸ்தூரி, தாக்குதலை தாங்காமல் சரிந்து விழுந்து உடனடியாக உயிரிழந்தார். அதிர்ச்சியடைந்த மோசின் அன்சாரி, அங்கிருந்த பணம், நகைகளை எடுத்துக்கொண்டு உத்தரப் பிரதேசத்திற்கு தப்பி ஓடினார்.
கஸ்தூரியின் உடல் முதல் தளத்தில் பூட்டி வைக்கப்பட்டு, நான்கு நாட்கள் கழிந்து உடல் உப்பி, குடல் வெடித்து சிதறிய நிலையில் கிடந்தது. அக்கம்பக்கத்தினர் துர்நாற்றம் குறித்து புகார் அளித்ததால், கொளத்தூர் காவல்துறை விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது, கொடூரமான காட்சி கண்டு அதிர்ந்தனர்.
சில காவலர்கள் அங்கேயே வாந்தியெடுத்ததாகவும், பொதுமக்கள் கூறுகின்றனர்.முன்னதாக, கணேசமூர்த்தி மனைவியை தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றும், போன் சுவிட்ச் ஆஃப் நிலையில் இருந்ததால் சந்தேகித்து சென்னை விரைந்தார்.
சிசிடிவி காட்சிகள் மற்றும் அக்கம்பக்க விசாரணையில் மோசின் அன்சாரியின் பங்கு தெரியவந்தது. உத்தரப் பிரதேசத்தில் மறைந்திருந்த அவரை தனிப்படை கைது செய்து, ட்ரான்சிட் ஆர்டர் பெற்று சென்னை அழைத்து வந்து விசாரித்தது.
விசாரணையில் மோசின் அன்சாரி, "நான் கஸ்தூரியை தீவிரமாக காதலித்தேன், அவரையே திருமணம் செய்யப்போகிறேன் என்று நினைத்தேன். ஆனால் அவர் திருமணமானவர், பாலியல் தொழிலாளி என்பதை மறைத்தார். என் சம்பளம் முழுவதும் அவரிடம் கொடுத்தேன்.
ஏமாற்றத்தை தாங்க முடியவில்லை. கொலை செய்ய விரும்பவில்லை, சாதாரணமாக நெஞ்சில் மிதித்தேன். உயிரிழந்ததும், உஆருக்கும் தெரியாமல் தப்பினேன். நீதிமன்றம் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்," என்று கண்ணீர் விட்டு கதறினார்.
இச்சம்பவம் அக்கம்பக்கத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் மக்கள், "கஸ்தூரியின் கணவர் கணேசமூர்த்தி தவறு செய்தார். மனைவி தனியாக சென்னையில் என்ன செய்கிறாள், எந்த தொழில் என்பதை கண்டறியாமல், பணத்திற்காக அனுப்பிவிட்டது அவரது பொறுப்பின்மை," என்று விமர்சிக்கின்றனர்.
மறுபுறம், "பணத்திற்காக வந்த கஸ்தூரி பாலியல் தொழிலில் ஈடுபட்டது மட்டுமல்ல, திருமணம், குழந்தைகள் என்பதை மறைத்து ஒருவரை ஏமாற்றியது அவரது குற்றம். அதற்கான தண்டனையை அவர் பெற்றிருக்கிறார்," என்றும் கூறுகின்றனர்.
கொளத்தூர் காவல் நிலைய அதிகாரி, "வழக்கு கொலைக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது. மோசின் அன்சாரி மீது கடுமையான விசாரணை நடத்தப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
49 minute ago
14 Oct 2025
14 Oct 2025
14 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
14 Oct 2025
14 Oct 2025
14 Oct 2025