Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்காலத்தில் உலகம் பூராகவும் பரவி வரும் கொவிட் 19 வைரஸ் தொற்று நோய் காரணமாக இந்நாட்டின் 43 இலட்சம் அளவிலான பாடசாலை மாணவர்கள் வீட்டுக்குள் காலத்தை வீணடித்து வருகின்றனர்.
இந்தச் சிறுவர்களின் சிந்தனைப் பலத்தையும் ஆக்கங்களை நிர்மாணிப்பதற்கான திறமையையும், சவால்களை வெற்றி கொள்வதற்கான பலத்தையும் விருத்திசெய்யும் நோக்குடன், கல்வி அமைச்சு மற்றும் இலங்கைத் தேசிய நூலகம் ஆகியன இணைந்து முன்னெடுக்கும் 10,000 நூல்கள் எழுதும் நாடுதழுவிய ரீதியிலான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை, தமிழ் மாணவர்கள் எவ்வகையிலேனும் புறக்கணிக்கக் கூடாதென வலியுறுத்திய கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, தமிழ் பேசும் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் எழுதும் நூல்கள் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டு சிங்கள மாணவர்களுக்கும் சிங்கள மொழியில் எழுதப்படும் மாணவர்களின் நூல்கள், தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு தமிழ் மாணவர்களுக்கு விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.
இதனால், தமிழ் மாணவர்கள், எக்காரணம் கொண்டும், இந்த வாய்ப்பைத் தளரவிடக்கூடாது என்றும் வலியுறுத்திய அமைச்சர், இதற்கான ஊக்குவிப்பை, சிறுவர்களின் பெற்றோர்கள் வழங்க வேண்டுமென்றும், கூறினார்.
அந்த வகையில், நீங்கள் எழுதிய புத்தகத்தை, பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஆசிரியர்களிடம் காண்பித்து திருத்தங்கள் செய்து, அதிபர் ஊடாக வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பிவைக்க வேண்டும். எழுதி அனுப்பி வைக்கப்பட்ட நூல்களில் சிறந்த நூல்களை, மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு, வலயப் பணிப்பாளர் அனுப்பி வைக்க வேண்டும். அதைத் தொடர்ந்து, மாகாணக் கல்விப் பணிப்பாளர், சிறந்த நூல்களை கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைப்பார்.
இதன்பிரகாரம் சிறந்த பத்தாயிரம் நூல்களை கல்வி அமைச்சு பிரசுரித்து வெளியிடும். நாடளாவிய ரீதியிலுளள அனைத்துப் பாடசாலைகளில் இருந்தும் ஒரு புத்தகமாவது எழுதி முன்வைக்கப்படும் எனக் கல்வி எதிர்பார்த்துள்ளது. இதனூடாக சிறுவர் எழுத்தாளராகவும் நூலாசிரியராக ஆக முடியும். அத்துடன் சிறந்த நூல்களை எழுதியோருக்கு அரச விருதும் கிடைக்கும் என்று, அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago