Kamal / 2019 செப்டெம்பர் 21 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 10,093 வழக்கு விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் தொடர்பாடல் அதிகாரியும் அரச சட்டவாதியுமான நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் தெரிவித்துள்ள அவர்,
மாவட்ட மேல்நீதிமன்றங்களுக்கு கடந்த எட்டு மாதங்களுக்குள் மாத்திரம் 6695 குற்றப்பத்திரங்கள் அனுப்பிவைக்கப்படடுள்ளதாகவும், நீதிவான் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வதற்காக 1778 வழக்குகள் தொடர்பான சட்ட ஆலோசனைகள் பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், 5169 குற்றவியல் வழக்குகள் நிறைவடைந்துள்ளதாகவும், அதற்கமைய மொத்தமாக 10,093 வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago