Freelancer / 2026 ஜனவரி 11 , மு.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை - எல்ல பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான லிட்டில் எடம்ஸ் பீக் மலையிலிருந்து தவறி வீழ்ந்த வெளிநாட்டு சிறுமி ஒருவர் நேற்று (10) பாதுகாப்பாக மீட்கப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலையுச்சியில் நின்றுகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றபோது, அந்தச் சிறுமி சுமார் 100 அடி ஆழமான செங்குத்தான பள்ளத்தில் தவறி வீழ்ந்துள்ளார்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், மீட்புக் குழுவினர் உடனடியாகக் அந்தப் பகுதிக்கு விரைந்தனர்.
மிகவும் சவாலான நிலப்பரப்பு மற்றும் கரடுமுரடான மலைப் பகுதிக்கு மத்தியில், மீட்புக் குழுவினர் கயிறுகளின் உதவியுடன் சிறுமி இருந்த இடத்தை அடைந்தனர்.
பெரும் போராட்டத்திற்குப் பிறகு சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டு மேலே கொண்டு வரப்பட்டார்.
தனது மகள் உயிருடன் மீட்கப்பட்டதைக் கண்ட தாய், உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்க மீட்புக் குழுவினருக்குத் தனது நன்றி தெரிவித்துள்ளார். (a)

2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago