Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூன் 13 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்த நிலையில், 11ஏ இருக்கையில் அமர்ந்திருந்த ஒரேயொரு பயணி மட்டும் காயங்களுடன் தப்பி பிழைத்துள்ளார். இதனால் 11ஏ இருக்கை தொடர்பான விவாதங்கள் உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. விமானத்தில் பயணிப்போர் அதிகம் வெறுத்த இருக்கையாக 11ஏ இருந்து வந்த நிலையில், தற்போது உலகின் பாதுகாப்பான இருக்கை என்று பெயர் அளிக்கப்பட்டு வருகிறது.
அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய 242 பயணிகளில் 241 பேர் உயிரிழந்ததாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் விமானம் போய் விழுந்த மருத்துவக் கல்லூரி விடுதியிலும் 5 மருத்துவ மாணவர்கள் உட்பட 7 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்த நிலையில் விமானத்தில் இருந்த ரமேஷ் விஸ்வக்குமார் புச்சர்வாடா என்ற நபர் மட்டும் தப்பி பிழைத்துள்ளார்.
தப்பி பிழைத்த ஒரே நபர்
அவர் ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தில் உள்ள 11ஏ இருக்கையில் அமர்ந்திருந்துள்ளார். இந்த 11ஏ இருக்கை ஜன்னல் ஓரத்தில் எகானமி வகுப்பின் முதல் வரிசையில் இருக்கும் இருக்கையாகும். அதேபோல் நெருக்கடியான நேரத்தில் வெளியேறும் அவசர வழியை ஒட்டி அமைந்துள்ள இருக்கை தான் 11 ஏ. விபத்து நடப்பதற்கு சில வினாடிகள் முன்பாக பயணிகளுக்கு அவசர தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
தப்பித்தது எப்படி?
இதனால் ரமேஷ் விஸ்வக்குமார் பதற்றம் கொள்ளாமல் தயாராக இருந்துள்ளார். சீட் பெல்ட்டை கழற்றிய அவர், விமானம் தரையில் அருகே வந்த போது சரியான நேரத்தில் சுதாரித்து விமானத்தில் ஏற்பட்ட பிளவை பயன்படுத்தி அங்கிருந்து குதித்துள்ளார். இதன்பின் அங்கிருந்து காயங்களோடு ஆம்புலன்ஸை நோக்கி ஓடிய அவர், அங்கிருந்தவர்களிடம் மற்ற பயணிகள் குறித்து விசாரித்தார்.
இதனிடையே ரமேஷ் விஸ்வக்குமார் பயணித்த 11ஏ இருக்கை குறித்த விவாதம் உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. ஏனென்றால் விமானத்தில் பயணிப்பவர்கள் 11ஏ இருக்கையை எப்போதும் விரும்ப மாட்டார்கள். ஏனென்றால் விமானம் தரையிறங்கிய பின், அதில் இருந்து கடைசியாக வெளியேறும் பயணியாக 11ஏ இருக்கையில் அமர்ந்திருப்பவர்களே வருவார்கள்.
அதேபோல் விமான இறக்கைகளுக்கு அருகில் இருக்கும் என்பதால், மேக கூட்டங்களை கூட சரியாக பார்க்க முடியாது. அதேபோல் ஜன்னலும் வட்ட வடிவில் இருக்கும். அதனால் கிட்டத்தட்ட ஜன்னலே இல்லாத இருக்கையை போன்ற சூழல்தான். இதனால் 11ஏ இருக்கையை விமானத்தில் பயணிப்பவர்கள் யாரும் விரும்ப மாட்டார்கள்.
இந்த நிலையில் அகமதாபாத் விமான விபத்தில் 11ஏ இருக்கையில் அமர்ந்திருந்த பயணி மட்டுமே உயிர் பிழைத்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. ஒரே நாளில் உலகிலேயே அதிகம் வெறுக்கப்பட்ட விமான இருக்கையில் இருந்து, அதிகம் பேசுபொருளான விருப்பமான இருக்கையாக 11ஏ மாறி இருக்கிறது.
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago