Editorial / 2019 ஒக்டோபர் 07 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரயில் திணைக்கள ஊழியர்கள் தொடர்ந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், 30 ரயில்களை இன்று முதல் சேவையில் ஈடுபடுபடுத்தவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், அலுவலக ஊழியர்களுக்காக நாளாந்தம் 40 ரயில்கள் தேவைப்படுவதாக, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
மஹவ, குருநாகல், பொல்கஹவல, காலி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து கொழும்புக்கான ரயில் சேவைகள் இன்று (07) காலை முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிலையில், தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்கும் வரை, தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடப்போவதில்லை என ரயில் சாரதிகள் சங்கத்தின் தலைவர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.
ரயில் ஊழியர்கள் ஆரம்பித்த பணிபகிஷ்கரிப்பு,12 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026