2025 ஜூலை 07, திங்கட்கிழமை

12 நீர்த்தேக்கங்கள் திறப்பு

Editorial   / 2018 நவம்பர் 24 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாடளாவிய ரீதியில், பல இடங்களில நிலவும் மழையுடனான வானிலையால், தப்போவ உள்ளிட்ட 12 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன என, நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு, அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலுள்ள நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள், இவ்வாறு திறக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, நுவரவெவ, மஹவிலச்சிய, இராஜாங்கனை, மஹகனதராவ, பதகிரிய ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

அத்துடன், தெபரவெவ, தெதெரு ஓயா, முருதவெல, திஸ்ஸவெவ, வீரவில ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நீர்த்தேக்கங்களுக்கு அருகில் தாழ் நிலப்பகுதிகளில் வாழும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .