Editorial / 2026 ஜனவரி 06 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுவன் ஒருவரை 60 வயது வயது மாமனார் பாலியல் சேட்டை செய்ய முயற்சித்து சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான மாமனார் தலைமறைவாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவனின் தந்தையார் தாயார் பிரிந்து வாழ்ந்து வருவதுடன் தந்தையார் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் தந்தையாரின் உறவினரான மாமா வீட்டிற்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குறித்த சிறுவன் உட்பட அவரது சகோதரர்கள் சென்று தந்தையாருடன் தொலைபேசியில் பேசி வருவதுடன் அவர்களுக்கு மாதாந்தம் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை தந்தையார் மாமனார் ஊடாக அனுப்பி வருகிறார். அதனை மாமாவும் வழங்கி வருகிறார்.
இதன் காரணமாக குறித்த சிறுவன் கடந்த மாதம் 24 ம் திகதி மாமனார் வீட்டிற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் மாமனார் சிறுவனின் அந்தரங்க உறுப்பை தொட்டு பாலியல் சேஷ்டை செய்ய முயற்சித்துள்ளார். இதனை தொடர்ந்து மீண்டும் கடந்த 27 ஆம் திகதி மாமானார் வீட்டுக்கு சென்ற சிறுவனிடம் பாலியல் சேஷ்டை செய்ய முயற்சித்துள்ளார்.
இது தொடர்பாக குறித்த சிறுவன் தாயாரிடம் தெரிவித்ததையடுத்து கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி 1990 என்ற அவசர சேவைக்கு முறைப்பாடு செய்தனர் இதையடுத்து பொலிஸார் குறித்த சிறுவனிடம் முறைப்பாட்டை பதிவு செய்து அவரை வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுமதித்தனர்
இந்த நிலையில் குறித்த மாமனார் தலைமறைவாகி உள்ளதாகவும் அவர் ஒரு அரசியல்வாதி என்று அவரை கைது செய்ய தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸ் நிலைய பெண்கள் சிறுவர் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்
2 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago