2025 ஜூலை 05, சனிக்கிழமை

15 சிறைச்சாலைகளிலிருந்து 115 அலேபேசிகள் கைப்பற்றப்பட்டன

Editorial   / 2018 டிசெம்பர் 07 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டிலுள்ள 15 சிறைச்சாலைகளில், கடந்த இரண்டு மாதக் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையையடுத்து, 115 அலைபேசிகள் மற்றும் சட்டவிரோத உபகரணங்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைகளின் புலனாய்வுப் பிரிவினர் இந்த சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர். இதன்போது, 127 சிம் அட்டைகள், 57 அலைபேசி பற்றரிகள், 27 சார்ஜர்கள் மற்றும் சிறியளவிலான 116 போதைப்பொருள் பொதிகள் கைப்பற்றப்பட்டனவென, அமைச்சின் பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

இவ்வாறான பொருட்கள், கொழும்பு மற்றும் களுத்துறை சிறைச்சாலைகளிலேயே அதிகம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

களுத்துறை சிறைச்சாலையில், 17 அ​லைபேசிகளும், 13 சிம் அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்கும் வகையில் இரவு பகலாக, புலனாய்வு அதிகாரிகள் கண்னாணித்து வருகின்றனரென, அமைச்சின் உயரதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .