Editorial / 2026 மார்ச் 17 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

தனக்கு வழங்கப்பட்டுள்ள 15 லீட்டர் எரிபொருள் ஒதுக்கீட்டை வைத்துக்கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்து பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதென்றால், அதற்குப் பல வாரங்கள் எடுக்கும் என யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) அன்று நடைபெற்ற அமர்வின்போது இந்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
"யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வருவதற்கு எமக்கு வெறும் 15 லீட்டர் எரிபொருளே வழங்கப்பட்டுள்ளது. இந்த அளவை வைத்துக்கொண்டு நான் கொழும்பு வருவதென்றால், முதலில் அனுராதபுரம் வரை வந்து அங்கு தூங்க வேண்டும். பின்னர் அடுத்த வாரத்திற்கான 'கியூ.ஆர்' ஒதுக்கீடு கிடைக்கும் வரை காத்திருந்து, அதனைப் பெற்றுக்கொண்டே கொழும்பு வந்து சேர முடியும். இங்கிருந்து மீண்டும் யாழ்ப்பாணம் செல்வதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்" என்றார்.
29 minute ago
44 minute ago
48 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
44 minute ago
48 minute ago
49 minute ago