2026 ஜனவரி 08, வியாழக்கிழமை

16 வயது சிறுமி மீது துப்பாக்கிச்சூடு ; உதவியவர் சிக்கினார்

Editorial   / 2026 ஜனவரி 07 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஹுவலை, போதியவத்தை பகுதியில் டிசம்பர் மாதம் 30ஆம் திகதி துப்பாக்கிச் சூடு நடத்தி, இளம் பெண் ஒருவரைப் படுகொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் காயமடைந்தார். இக்குற்றச் செயலைச் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை வழங்கியதோடு, குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்   இவர் படோவிட்ட 3ஆம் கட்டப் பகுதியில் வைத்து செவ்வாய்க்கிழமை (06) அன்று  கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் தெஹிவளைப் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.   அவரிடமிருந்து 15 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் குறித்து கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .