Editorial / 2020 ஏப்ரல் 09 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
19 மாவட்டங்களில் இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
எனினும், இரத்தினபுரி, பெல்மதுளை பகுதியில் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படமாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளூடாகப் பயணிப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது
இதேவேளை, இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் அமுலாகும் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 6 மணிக்கு மீண்டும் தளர்த்தப்படும்.
அத்துடன், அன்றைய தினம் மாலை 4 மணிக்கு மீண்டும் அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் காணப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
16 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
6 hours ago
09 May 2026