2025 ஜூலை 07, திங்கட்கிழமை

’19ஆவது திருத்தத்தை ஏன் இரத்துச் செய்ய வேண்டும்?’

Editorial   / 2020 ஜனவரி 22 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தினை இரத்துச் செய்ய வேண்டும் என்ற, கருத்து கட்டியெழுப்படுவது எந்த நோக்கத்துக்காக என்பது, தெளிவில்லாமல் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல இதனை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், “அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்தின் கீழ், ஜனாதிபதியால் உயர் நீதிமன்றத்துக்கு பெயரொன்றை முன்வைத்தால் அதனை யாராலும் நிராகரிக்க அதிகாரம் இல்லை.

எனினும், நாங்கள் 19ஆவது திருத்தத்தை கொண்டு வந்து அதில் ஒரு பிரிவினை சேர்த்தோம். அதன் ஊடாக, நிறைவேற்று அதிகாரம் முன்வைக்கும் யோசனையை அரசியமைப்பு சபையால் நிராகரிக்க முடியும்.

அரசியலமைப்பு சபையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அங்கம் வகிக்கின்றனர்.

நீதிமன்றம், அரச சேவை ஆணைக்குழு, பொலிஸ் உள்ளிட்ட துறைகளில் சுயாதீனத்தை ஏற்படுத்தவே நாங்கள் அரசியலமைப்பு சபையை கொண்டுவந்தோம்.

இந்த நிலையில், ஏன் அதனை நீக்குவதற்கு முயற்சிக்கின்றார்கள்?” என அவர் கேள்வியெழுப்பினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .