2025 ஜூலை 05, சனிக்கிழமை

19ஐ திருத்த ஐ.தே.க எதிர்ப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 07 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை மேலும் திருத்தத்துக்கு உள்ளாக்க, ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் பிரஜைகளின் உரிமைகளுக்காகத் தாம் எப்போதும் போராடத் தயாராக இருப்பதாகவும், ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பில், கொழும்பில் இன்று (07) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா, ஜனநாயகத்தைச் சீர்குர​ழைப்பதற்காக அணிதிரண்டுள்ள துஷ்ட சக்திகள், 19ஆவது திருத்தச் சட்டத்தையும் மாற்றியமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனரெனக் குற்றஞ்சாட்டினார்.

பிரஜைகளை பலவீனப்படுத்தி, அரசியல்வாதிகள் பலமாகிக்கொள்வதற்கு எதிராக, எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடத் தாம் தயாராக உள்ளதாகவும், அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .