Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Freelancer / 2021 ஓகஸ்ட் 22 , பி.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிவேம்பு பிரதேசத்தில், வியாபாரத்துக்காக 2 கிலோ 185 கிராம் கேரளா கஞ்சாவை எடுத்துச் சென்ற கஞ்சா வியாபாரி ஒருவரை இராணுவ புலனாய்வு பிரிவினர், இன்று (22) இரவு கைது செய்து ஒப்படைத்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, சம்பவதினமான இன்று இரவு 7 மணியளவில் மாவடிவேம்பு பகுதியில் இராணுவ புலனாய்வு பிரிவினர் பொலிஸாருடன் இணைந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதன்போது, மாவடிவேம்பு பகுதியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி, பொதி செய்யப்பட்ட 2 கிலோ 185 கிராம் கேரள கஞ்சாவை வியாபாரத்துக்காக மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற போது அவரை இராணுவ புலனாய்வு பிரிவினர் வீதியில் வைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரியையும் மீட்கப்பட்ட கேரளா கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் இராணுவ புலனாய்வு பிரிவினர் ஓப்படைத்துள்ளதாகவும் சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
34 minute ago
34 minute ago
37 minute ago