2025 ஜூலை 16, புதன்கிழமை

20 இலட்சத்தைத் தாண்டியது

Editorial   / 2020 ஏப்ரல் 15 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 20 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

அந்த வகையில், இந்த 20 இலட்சம் பேரில், 484,603 பேர் குணமடைந்துள்ளதுடன், 126,757 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.

அந்த வகையில், 13 இலட்சத்துக்கும் அதிகமானோர் மாத்திரமே தற்போது வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

உலகளாவிய ரீதியிலுள்ள 210 நாடுகளிலுள்ள மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிக அளவிலான பாதிப்புகளையும் இறப்புகளையும் எதிர்நோக்கியுள்ள நாடாக அமெரிக்கா காணப்படுகின்றது.

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் ஸ்பெயினும் மூன்றாவது இடத்தில் இத்தாலியும் நான்காவது இடத்தில் பிரான்ஸும் காணப்படுகின்றது.

அத்துடன், அதிகளவான இறப்புகளைச் சந்தித்த இரண்டாவது நாடாக இத்தாலியும் மூன்றாவது நாடாக ஸ்பெய்னும் நான்காவது நாடாக பிராஸ்ஸும் காணப்படுகின்றது.

அந்த வகையில், சீனாவில் தற்போது பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பல மடங்காக குறைந்துள்ளதுடன், இறப்புகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .