Editorial / 2025 டிசெம்பர் 29 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

சுமார் 20 கோடியே 68 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ ரக போதைப்பொருள் தொகையை கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக கடத்திச் செல்ல முயன்ற இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் அடங்களாக இலங்கை பயணிகள் நால்வர் திங்கட்கிழமை (29) அன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இந்த போதைப்பொருள் தொகையை தாய்லாந்தின் பெங்கொக் நகரில் கொள்வனவு செய்து, இந்தியாவின் மும்பை நகருக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து இண்டிகோ விமான சேவைக்குச் சொந்தமான 6E-1185 என்ற விமானம் மூலம் திங்கட்கிழமை (29) அன்று காலை 07.50 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
குறித்த பெண்கள் பொரளை மற்றும் ஒருகொடவத்தை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். ஆண்கள் தெமட்டகொட மற்றும் ஒருகொடவத்தை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளில் 20 பொதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோ684 கிராம் “குஷ்” போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேனவின் ஆலோசனையின் பேரில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நான்கு பயணிகளும், நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.
19 minute ago
43 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
43 minute ago
53 minute ago
1 hours ago