2025 மே 16, வெள்ளிக்கிழமை

கொத்தலாவலவின் மனைவி எங்கே?: அறிக்கையிடுமாறு நீதிமன்றம் உத்தரவு

Kanagaraj   / 2015 ஜூன் 16 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலிங்கோ வர்த்தக குழுமத்தில் வைப்பிட்ட பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் அதன் உரிமையாளர் லலித் கொத்தலாவலவின் மனைவியான சிசிலியா கொத்ததலாவ தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா டி லிவேரா, இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

அவர் தொடர்பான அறிக்கையை ஆகஸ்ட் 12ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு இரகசிய பொலிஸின் இன்டர்போல் பிரிவுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மன்றில் ஆஜராகியிருந்த அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி திலீப் பீரிஸ், இந்த சம்பத்துக்கு பின்னர் அவர், இலங்கையை விட்டு வெளியேறிவிட்டிருந்த போது அவரை கைதுசெய்யுமாறு சர்வதேச பொலிஸ்க்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .