2025 மே 16, வெள்ளிக்கிழமை

வாஸுக்கு பிணை

Kanagaraj   / 2015 ஜூன் 16 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட குழுவினருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட குழுவினருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கோடீஸ்வர வர்த்தகரான சியாம் மொஹமட் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட குழுவினருக்கே பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதிகளான லலித் ஜயசூரிய, குசலா சரோஜின் மற்றும் அமேந்திர சேனாரத்ன ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் குழுவே இன்று பிணை வழங்கியுள்ளது.

ஐந்து இலட்சம் ரூபாய் ரொக்கப்பிணை மற்றும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டதுடன் பிணை நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்பிரகாரம் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இரகசிய பொலிஸூக்கு சமூகமளிக்கவேண்டும்.
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுடன் கைதுசெய்யப்பட்ட ஏனை ஐவரும் மேற்குறிப்பட்ட பிணை நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கோடீஸ்வர வர்த்தகரான சியாம் மொஹமட் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட குழுவினர், இரண்டு வருடகாலமாக சிறைவைக்கப்பட்டுள்ளமையினால் அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் அந்த குழுவினருக்கு பிணை வழங்குமாறு நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை கோரிநின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .