2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஹெரோய்ன் விற்ற கான்ஸ்டபிள் சிக்கினார்

Kanagaraj   / 2015 ஜூன் 16 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோய்ன் போதைப் பொருட்களை விற்பனை செய்ததாக கூறப்படும் மேல்மாகாண வடக்கு விசேட குற்றப்பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள், விசேட அதிரடிப்படை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அந்த கான்ஸ்டபிளுடன் அவருடைய தாய் மற்றும் மகனையும் கைதுசெய்துள்ளதாக விசேட அதிரடிப்படை பொலிஸ் அறிவித்துள்ளது. 

கிடைத்த புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் முச்சக்கரவண்டியில் 201 ஹெரோய்ன் பெக்கட்டுக்களை கொண்டுசென்றுகொண்டிருந்த போதே வத்தளையில் வைத்து கைதுசெய்துள்ளதாக விசேட அதிரடிப்படை அறிவித்துள்ளது.

அவருக்கு போதைப்பொருள் கிடைத்தமை தொடர்பில் தேடிபார்த்தபோது பேலியகொடை பொலிஸாரினால் அந்த கான்ஸ்டபிளுக்கு போதைப்பொருள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

அந்த போதைப்பொருட்களுக்கான பணத்தை கான்ஸ்டபிளின் தாய் மற்றும் மகன் பெற்றுக்கொள்வதற்காக வருகைதந்தபோதே கைதுசெய்யப்பட்டனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் வத்தளை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .