Kanagaraj / 2015 ஜூன் 17 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சரின் தனிப்பட்ட பாதுகாப்பு சேவையில் இருப்பதாக கூறப்படும் ஒருவருக்கும் காணி தரகுகாரருக்கும் பிஸ்கட்கொடுத்து, அவர் மயங்கியதன் பின்னர் அவரிடமிருந்த தங்க சங்கிலி, மோதிரம் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றமை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கனடாவிலிருந்து வந்திருப்பதாக கூறப்படும் சந்தேகநபரான இந்த கொள்ளைகாரர், அந்த பாதுகாப்பு அதிகாரியிடம் காணியை கொள்வனவு செய்வது குறித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கொள்ளைகாரரும் அந்த நபரும், தரகருடன் கொஸ்கம பிரதேசத்துக்கு காணியை பார்ப்பதற்காக சென்றுள்ளனர்.
அப்போதே கொள்ளைக்காரர், அவ்விருவருக்கும் பிஸ்கட் கொடுத்துள்ளார். அதனைசாப்பிட்ட இருவரும் சுயநினைவு இழந்ததன் பின்னர், தரகரிடமிருந்த தங்க சங்கிலி, 6ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பாதுகாப்பு அதிகாரியிடமிருந்த 3 பவுண் தங்க சங்கிலி மற்றும் நான்கு மோதிரங்களை கொள்ளையிட்டு சென்றுள்ளார்.
அவ்விருவரும் சுயநினைவு திரும்பிய பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago