2025 மே 16, வெள்ளிக்கிழமை

இன்புளுவன்ஸா வைரஸ்: கர்ப்பிணி மரணம்

Kanagaraj   / 2015 ஜூன் 17 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்புளுவன்ஸா AH1N1  வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 25 பேர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அதில், 26 வயதான கர்ப்பிணி தாய் மரணமடைந்துவிட்டார் என்றும் அவர், இன்புளுவன்ஸா AH1N1  வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தவர் என்று அந்த வைத்தியசாலையில் வைத்திய அதிகாரி சுதர்ஷினி விக்னேஸ்வரம் தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணி தாய்மார்கள்,  2 வயதுக்கும் குறைந்த குழந்தைகள் நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய்களினால் பாதிக்கப்பட்டோர், மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டோரையே இந்த வைரஸ் விரைவாக தாக்குகின்றது என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

காய்ச்சல், இருமல் மற்றும் தலைவலியுடன் கூடிய காய்ச்சல் சில நாட்களுக்கு நீடிக்குமாறு அவ்வாறாவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு உடனடியாக சென்று சிகிச்சை பெற்றுகொள்ளவேண்டும்.

இந்த வைரஸ்க்கு முறைப்படி சிகிச்சை பெற்றுகொண்டால் அதனை சுகப்படுத்த முடியும் என்றும் வைத்தியர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .