Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூன் 17 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
உடவலவ, கொழம்பகேஆர மகா வித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி பயின்ற ஹசித எரஞ்ஜன லக்ஷான் என்ற மாணவன் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காட்டுப்பகுதியொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இம்மாணவனின் படுகொலைக்கான காரணம் தற்போது பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த மாணவனின் படுகொலையை அடுத்து, இரத்தக் கறையுடன் குறித்த பிரதேசத்திலிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட முச்சக்கரவண்டியின் சாரதி தொடர்பில் பொலிஸாரால் நடத்தப்பட்ட விசாரணையின் போதே படுகொலைக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட மாணவனுக்கும் 17 வயது மாணவியொருவருக்கும் இடையில் நீண்ட நாட்களாக காதல் தொடர்பு இருந்துவந்துள்ளது. இருப்பினும், மேற்படி மாணவியை, முச்சக்கரவண்டிச் சாரதியான 21 வயது இளைஞனும் ஒருதலைப்பட்சமாக காதலித்துள்ளார். அத்துடன், தன்னைக் காதலிக்குமாறு மாணவியை அவர் வற்புறுத்தியும் வந்துள்ளார்.
இது குறித்து, குறித்த மாணவி தனது காதலனான ஹசிதவுக்கு தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து, ஹசிதவுக்கும் முச்சக்கரவண்டி சாரதிக்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையிலேயே, கடந்த 14ஆம் திகதி, மாணவனின் வருகைக்காக தனது நண்பனொருவருடன் காத்திருந்துள்ள முச்சக்கரவண்டி சாரதி, மாணவனை சந்தித்து, இந்தப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துக்கொள்வோம் என்று கூறி, தனது முச்சக்கரவண்டியிலேயே மாணவனை அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர், மாணவனை மனிதாபிமானமற்ற முறையில் அவ்விருவரும் கூரிய கத்தியொன்றார் சரமாரியாகத் தாக்கி படுகொலை செய்துவிட்டு, மாணவனின் சடலத்தை காட்டுக்குள் வீசிச் சென்றுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரும் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுடைய தகவலுக்கமைய, படுகொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
15 May 2025