2025 மே 16, வெள்ளிக்கிழமை

இளம் பெண்ணின் சடலத்தை தோண்டியெடுக்க முயற்சி: 4பேர் கைது

Kanagaraj   / 2015 ஜூன் 17 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

21 வயதான இளம் பெண்ணொருவரின் சடலத்தை சவக்குழியிலிருந்து தோண்டி எடுப்பதற்கு முயற்சித்த நான்கு இளைஞர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம், அநுராதபுரம் பாலுகொலாவ கம்பிரிஸ்வெவ எனுமிடத்திலேயே இடம்பெற்றுள்ளது. 

குடும்ப பிரச்சினை காரணமாக அந்த இளம் பெண் கடந்த 11ஆம் திகதி தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருடைய சடலம் அக்கிராமத்தில் உள்ள பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

சவக்குழியும் கொங்கிரீட் போட்டு மூடப்பட்டுள்ளது. அந்த கொங்கிரீட்டை உடைத்து சவக்குழிக்குள் இருந்த இளம்பெண்ணின் சடலத்தையே முறையே 18,20,22 மற்றும் 28 வயதான இளைஞர்கள் எடுப்பதற்கு முயற்சித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களை அடுத்தே இந்த நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .